29 January, 2014

சட்டுவம்


 
மாதம்:மார்கழி
வருடம்: பிரபவ
 

“நீலக்குயிலே உன்னோடுதான்...” ஞாயிறு காலை AIR விவிதபாரதியின் வர்த்தக ஒலிபரப்பான உங்கள் விருப்பத்தில் ஒலித்துக்கொண்டிருந்தது.

பத்து வீடுகள் கொண்ட அந்த ஒண்டுக்குடித்தனத்தில் நச்சுவின் குடும்பம் ஐந்தாம் வீடு. அனைவரும் ப்ராமணர்கள்.

நச்சு விளையாட ஆட்களை தேடிக்கொண்டிருந்தான். நடந்து பழக்கமில்லை. ஓடிக்கொண்டிருப்பதே அவன் வழக்கம்.

"அண்டை குடித்தனத்தார் ஓடாதே ... நடை.. மெதுவா நடை..சத்தம் போடதே..என்று கடிந்த  வாறே இருந்தனர்.

நச்சுவுக்கு விளையாட ஆள் இல்லை. அரையாண்டு முடிந்ததால் சூச்சியும் பாட்டி ஆத்துக்கு  போயுட்டன்.
கிணத்தடியில்  கிளினிக் பிளஸ்  போட்டு தலைக்கு  குளித்துவிட்டு, ஒரு சிகப்பு மஞ்சள் எலாஸ்டிக் நிஜாரும் ,அரக்கு சட்டையும் மாட்டிக்கொண்டு , சூடான பருப்பு பொடி சாதம் சாப்டுட்டு ,இவ்ளோ சீக்கிரம் ரெடியானது வெலையாடர்த்துக்கு தான்...

 ஆனால் யாருமே இல்லை..

மணியும் காத்தாலை 10:15 .அம்மா கிட்ட சொல்லியாச்சு.

தாத்தா சத்தமா “பல்லாண்டு” சொல்ல,

அப்பாவும் சைக்கிள் தொடைக்க ஆரம்பிச்சாச்சு.

அப்பாவோட ஞாயித்துகிழமை ரொம்ப சிம்பிள்.

காலங்காத்தாலை எழுந்ததும் ஒட்டடை அடிக்கணும் ,தலைக்கு வெந்தையம்,கதவுக்கு எண்ணெய்,தன்னோட VIP பெட்டியில பழைய certificates சைக்கிள் சர்வீஸ், குளியல், திருவாராதனை, போஜனம், நெடிய பகல்தூக்கம்.

சூச்சு ஆஹமும் பூட்டிருக்கு.

விமலாவும் மத்தியமா கிளாஸ் போயாச்சு.

என்ன பண்றதுன்னு தெரியாம இங்கிருந்தா அப்பாகிட்ட மாட்டின்ருவோம்

 பிரம்மப்ரியத்தனம் செஞ்சு வெளில வந்தாச்சு.

வாசல்ல கிரிக்கெட் டீம்ல சேத்துக்க மாட்டா. எல்லாம் பணன்கொட்டைல நாறு முளைத்த விடலைகள்

.நச்சுவோ சின்ன வடு.

வெங்கி அண்ணா சைக்கிள் வாடகைக்கு எடுத்திருப்பா. 

நச்சு வாசலில் உட்கார்ந்துண்டு  வேடிக்கை பார்துண்டிருந்தான்.  

நீல சட்டையும் ,காவி வேட்டியுமா ஒருத்தர் அவனண்ட வந்து, நச்சு எப்படி இருக்கன்னு கேட்டார். அவனுக்கு ஒரே குழப்பம் .உடனே நன்னா இருக்கேனுட்டு யோசிக்க ஆரம்பிச்சுட்டான். யார இருக்கும்?

நீங்க யாரு...

“நாந்தாண்ப்பா உம்மாச்சி.”

நச்சுவோட கண்ணு  விரிய கேட்டான் “உம்மாச்சியா ...”

நச்சுவுக்கு சந்தேகமாயிடுத்து “நீங்க இப்படி இருக்கேள்.  “ஏன் இப்படி இருக்கேள்... ?”

நச்சுவுக்கு நம்பிக்கையே இல்லை

மெதுவா நடந்து போயி தொட்டு பார்த்தான். ஒன்னும் புதுசாக உணரவில்லை.

“உங்களால பறக்க முடியுமா.?”

“முடியாது ப்பா...”

“உங்களால மறைய முடியுமா.? மலைய  தூக்க ? கடல் மேல நடக்க ? நான் என்ன யோசிக்குரேன்ன்னு சொல்லுங்கோ? என்னோட Homework பண்ண?  எதாவது சூப்பரா?”  என்று ஒரே மூச்சில் கேட்டான் ...

ஊம்ஹும் ஏதும் முடியாது ப்பா...

அப்போ என்னதான் பண்ண முடியம்.....

நீ பண்றத பாப்பேன் பா...


அவனால் நம்பமுடியா விட்டாலும் அவர் சொல்வதில் உண்மை இருப்பதாகவே உணர்ந்தான்.

“ டே............ய் நச்சு ..... எங்கடா இருக்க.....” அப்பாவின் குரல் கேட்டது...

“ கொஞ்சம் இங்கயே இருங்கோ” என்று வந்தவரிடம் சொல்லிவிட்டு 

உள்ளே ஓடினான்..

“சொல்...லுப்.....பா” என்றான் ....

தாத்தா easychair இல் சாஞ்சுண்டு  இருந்தா ... மெதுவா அரைதூகத்தில தலைய திர்ப்பினார்.. விசிரிகட்டை திரும்பவும் மரை கழுண்ட பெண்டுலம் போல ஆட ஆரம்பிச்சு நின்னது...

யாரண்ட பேசின்றுந்த டா... இப்போ ...பேச்சு சத்தம் கேட்டது...

 நான் உம்மாச்சி ட்ட பேசின்றுன்தேன் பா

டேய்.....

ஆமாம்பா.. அவர் உம்மச்சின்னு தான் சொன்னார்.

நெஜம்மா ப்பா... இங்க தான் நிக்குறார்.

ஏய் பத்தூ..... இவனப்பாரேன் .....ஏதோ கதைய விட்டுண்டு திரியிறான்..

அய்யோ என்று கத்தியதில்.. தாத்தா எழுந்துட்டார்....

என்னடா நச்சு...

நான் உம்மாச்சிய பாத்தேன்... தாத்தா.... இவாள்லாம் நம்ப மாட்டேங்கறா..

தாத்தா எழுந்திருக்காம சொன்னார்.. “என்னடா....... நச்சு... உளர்ற..”

போங்கோ    நீங்களும் இதயே சொல்றேள்..

“.. இது என்னவாம் ....பின்ன.. உலராம “என்றார் அப்பா..

சரி... விடு உம்மாச்சி என்ன பண்ணினார்? அப்பா எகத்தாளமாய் கேட்பது புரியாமல் ,

ஒன்னும் பண்ணலை ப்பா... ஆனா உம்மச்சின்னர்..

சரி உன்னிட்ட என்ன சொன்னார்

““நாந்தாண்ப்பா உம்மாச்சி.” அப்படின்னார்.

“எப்படி வந்தார்..பறந்தா “அப்பா கிண்டலுடன்.

இல்ல.. நடந்து ப்பா

என்ன வச்சுண்டு இருந்தார்..

ஒண்ணுமே இல்லப்பா..

 

ஒன்னு இல்லைங்கற.. நடந்து வந்தாருங்கரே... ஒன்னும் சொல்லல , வேற ஏதாவது குடுத்தாரா..

இல்லப்பா...

அப்பறம் எப்படிப்பா நம்பறது.. யாரோ உன்ன நன்னா ஏமாத்துறாடா. ஜில்லு.

உடனே வெளியே ஓடிப்போய் பார்த்தான்..

வந்தவரை  காணும்.

மிகவும் விரக்தியோடு வீட்டுக்கு வந்தான்.

 

சரிப்பா நீங்க உம்மாச்சிய பாதிருக்கேளா..

இல்ல டா ஜில்லு என்றார்.

ஏதாவது செஞ்சாரா..எதாவது உங்கள்ட சொன்னாரா? எதாவது குடுத்தாரா , கேட்டாரா? என்று பதில் கேள்வி கேட்டான்.

அப்புறம் எப்டி நம்புறேல்..

டேய் நச்சூஊஉ...... நம்பிக்க தாண்டா உம்மாச்சி..

“அப்போ உங்களுக்கும் எதுவும் செய்யல,சொல்லல,கேக்கல, ஆனா நீங்க நம்பரேல்.. நாஞ்சொன்னா இல்லங்குறேல்.நான் தான் நம்பரேனே..”என்றான்..

அனைவரும் ஒரு நிமிடம் இவன் சொல்வது சரியோ என்று ஒரு க்ஷணம் யோசித்துவிட்டு  , அவரவர் வேலையை தொடர,

அவனுக்கு புரியவில்லை.ஆனால் வந்தது கடவுளென்று அவன் நம்பினான்.

 

சட்டுவம்- கறிச்சுவை அறியாதென்பது உண்மையே.

 

 

No comments: