22 March, 2010

E pluribus unum-அமேரிக்கா(4)

GPS இல்லாமல் வெளிநாட்டவர் எங்குமே பயணம் செல்வது கடினம்,அநேகமாக இயலாத காரியம் என்றே சொல்லலாம்.அந்த அளவிற்கு GPS துல்லியமும், வேகமுமாக இருந்தது. Bombay Grill - இந்திய உணவகத்திற்குள் நுழைந்தோம், மசாலா வாடை கொஞ்சமும் இல்லை ,தாராளமாகவும், அமைதியாகவும், எதிர்பார்த்ததை விட கூட்டம் நிறைந்தும் இருந்தது. Buffet system , நாங்களே பரிமாறிக்கொண்டோம்,அனைத்தும் வடஇந்திய உணவு வகையறாக்கள்.சுவரில் நவீன ஓவியங்களும், மெல்லிய (Blues- nstrumental) இசையும் ஓடிக்கொண்டிருந்தது.


"இங்கு- அனைத்து உணவகங்களிலும் Drinks (coke,Pepsi,Ice-Tea, Sprite,Plain Water) எதுவாக இருந்தாலும் Free-Flow, குறைய குறைய , நிரப்பப்படும்(கூடுதல் விலை இல்லை) Tips பொறுத்த வரை மொத்த பில்லில் 10% "என்றும் நண்பர் அறிவுரைத்தார். மிதமான உணவு. கொஞ்சம் அரட்டை."சகோதர சண்டையால் சமீபமாக துவங்கப்பட்டது" என்றும் கூறினார்.
அடுத்து Walgreens (Walmart Pharma Division)சென்றோம். வீடு திரும்புகையில் நேரம் மாலை 3.௦௦.


டிவியில் அதிக அலைவரிசைகள் - Reality Shows நிரம்பியே இருந்தது. நிகழ்ச்சிகள் புரிய கொஞ்சம் மெனக்கெட வேண்டும்.
Insurance, Medicines, Cars, Food விளம்பரங்கள் அதிகம்.

என் குடியிருப்பின் அருகில் TomThumbs சென்று அரிசி,காய்கறிகள்,பழங்கள், பால்,வாங்கிவந்தேன்.எல்லாம் Standard-Maxi size. சிறிய அளவில் இல்லை.Beer -மிக மிக மலிவு, அதிக வகையறாக்கள்.

சில காய்கறிகள் ஆங்கிலத்தில் இங்கு வேறு பெயரில் உள்ளது.
Ladies Finger- Okra,Brinjal-Egg plant,Capsicum-Green/Red Peppers... etc., என்று இங்கு வழக்கில் இருக்கும் பெயர்களே வேறு.(Carrot,Brocolli,Beans அதிக அளவில் காண முடியும்)
காய்கறிகள் கொஞ்சம் அதிக விலை. பழங்கள் மலிவு.உருளைக்கிழங்கு நிறைய வகைகளிலும் ,விலைகளிலும் உள்ளது.காரணம் இவர்களின் உணவில் உ.கிழங்கின் பங்களிப்பு. அநேகமாக ஒரு வேளையேனும் உ.கி உணவில் தென்படும். 1840 களின் துவக்கத்தில் ஐயர்லாதில் உ.கி விளைச்சலின் வீழ்ச்சியால் நிலவிய பெரும் பஞ்சத்தால் (Great Famine) அமெரிக்காவிற்கு பெயர்ந்த -ஐரிஷ் கூட்டத்தின் தாக்கமே உ.கி அதிகம் உணவில் தென்படுவதற்கு காரணம். மக்களில் பெரும்பகுதி ஐரோப்பிய கலப்பினங்களே.
Mash Potatoes, Baked Potoato,Potato Nuggets,Potato Fries என்று பலவகை உ.கி யின் ராஜ்யத்தில் காணாலாம்.



வீடு திரும்பியவுடன் -சமைத்து, உண்டு, டிவி,இன்டர்நெட் என்று தூங்க செல்லும்பொழுது இரவு மணி 10:00.இரவில் இருமுறை கண்விழித்தேன் .

சவரம் செய்து காலையில் வேலைக்கு தயாரானேன்.அமெரிக்காவில் காரில்லாதவன் - காலிள்லாதவன், அனைத்திற்கும் வேறொருவரை நம்பும் நிலை.மிகவும் சிரமம் எதிர் நோக்கவேண்டியிருக்கும்!!

...To be continued.

17 March, 2010

E pluribus unum - அமெரிக்கா-3

படுத்த மாத்திரத்திலேயே தூக்கம் அழுத்த , விழித்தால் மணி இரவு 2:00 .
கால மாற்றத்தால் Circadian Rythms -வேறுபாடின் விளைவு என்பதை தொடர்ச்சியான 2 வார நடுநிசி விழிப்பிற்கு பின் அறிந்தேன்.

உடற்கூற்றின் இயக்கமே ஆச்சரிய தக்கது. !!!!!
இரவில் ஓரிரு முறை தூக்கம் தடைபட்டாலும் அசதியும் குளிரும் கலந்து நித்திரையை ஆரத்தழுவியது.
காலை 7 மணி, அனைத்துமே புதிதாய் இருந்தது . எது வழி, எது அறை என்று மூளைக்கு விளங்க சிறிது நேரம் பிடித்தது.
ஸ்ரமபரிகரங்களை முடித்து , வெளியில் செல்லும்போது மணி 9.
வெப்பநிலை 9˚C. வெளியில் வந்ததும் குடியிருப்பை முழுதாய் பார்த்தேன்.

இரவு ஓர் மர்ம கூடாரம் , .இரவோடு குளிரும் சேர்ந்த சதிகாரக்கூட்டணியின் ஆதிக்கத்தில் அனைத்துமே விழியிலிருந்து விலகி , காட்சிகள் மனதில் பதிய மறுக்கும் .இரவில் கடந்து வந்த பாதைகள் அனைத்துமே மாய மூட்டமாய் இருந்தது .
கீழிறங்கியவுடன் , கண்ணில் பட்டவை யாவுமே புதிதாய் இருந்தது.
நன்கு வளர்ந்து தடித்த இலையுதிர்ந்த மரங்களில் பருத்த அணில்கள்,நிசப்தமான பறவைகளின் கூச்சல் , ஆளரவமற்ற வீதி, பழுப்பு புல்வெளியின் மீது காற்றில் புரளும் காய்ந்த Maple இலைகள் பார்த்த மாத்திரத்திலேயே (Notre Dame de Grace)ஓவியம் நினைவில் விழ ,, தூரத்தில் ஒலித்த ரயிலின் கூவல் - உறைந்த கட்சியை மெல்ல நகர்த்தியது.
என்னோடு வந்த நண்பரின் குடியிருப்புக்கு 5 நிமிட நடை.
உள்ளே வெப்பமாக இருந்தது, Hot Milo, சின்ன அரட்டை,வேறு ஒரு நண்பரும் சேர்ந்து,
கடைக்கு செல்ல Dodge Ram (Black)-ல் தயாரானோம், வெளிநாட்டினரை தவிர அனைவருமே கார் வைத்திருக்கிறார்கள். நிறைய தெரிந்திராத ரகம். Texas வாசிகள் அதிகம் Truck பிரியர்கள். பலரும் விவசாயம், பண்ணை,கால்நடை சார்ந்த தொழிளில் இருப்பதால் இவர்கள் அநேகமாக Truck விரும்பிகளாகவே இருக்கிறார்கள். (Truck மோகத்திற்கு மற்றுமொரு காரணம் Masculinity. ஆண்கள் பலரும் Truck ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.Dallas பொறுத்த வரை 10 இல் 7 கார் வகைகள் Trucks)
பகலில் சாலைகள் குளிரால் மோட்டமாகவே இருந்தது.
எங்கும் 2 கொடிகள் எற்றப்படிருக்கிறது. ஒன்று தேசியக்கொடி, மற்றொன்று Texas மாநிலக்கொடி.,
Texas - Lone Star State என்றழைப்பதற்கு காரணமும் Texas கொடியின் தோற்றம் தான்.மேலும் எல்லா கார்களின் எண்பலகைகளும் அந்தந்த மாநிலத்தின் பெயரிலேயே பொறிக்கபட்டிருக்கிறது.
Texas- French,Spain, Mexico colony யாக இருந்துள்ளது.
அதிகம் Rodeo நிகழ்ச்சிகள் உள்ளதற்கு காரணமும் இதுதான். பிரெஞ்சு ஆதிக்கம் Lousiana வில் அதிகம்-அண்டை மாநிலம் (அங்கு அதிகம் கருப்பர்களே). மற்றொரு மாநிலம் Oklahoma.


Texas - Mexico எல்லை என்பதால் எல்லையோர நகரங்களில் -அதிக குற்றங்கள் என்பது செய்தி.
மெக்ஸிகோவும் , அமெரிக்காவும் - Texas குக்காக 1850 களில் பல முறை சண்டை இட்டுள்ளன. இந்த colonization -உணவு ,உடை,வாழ்க்கை முறைகளில் பிரதிபலிக்கிறது.

இது தவிர Texas Long Horns (Logo) சின்னம் இங்கு அதிக பிரசித்தி. வீடுகளில், உணவகங்களில், கார்களில், தெருப்பலகைகளில், உடைகளில் என்று எல்லாவற்றிலும் காண முடிகிறது,
45 நிமிட பயணத்தில் பேசிக்கொண்டே நிறைய கவனித்தேன் , குளிர்கால உடைகள், அகண்ட வெட்ட வெளி, பரந்த நிலப்பரப்பு, சாலையில் வேகமும் ஒழுக்கமுறையும், தெருக்களில் நடப்பவர்கள் மிகமிகக்குறைவு .



உணவிற்காக GPS தயார் செய்து , Bombay Grill நோக்கி நகர்ந்தோம் ....

.....To be Continued








16 March, 2010

E pluribus unum - அமெரிக்கா(2)

அதிக டிராபிக் இல்லை,வெளியில் வந்த வுடனேயே குளிர் ஊடுருவியது , உதடுகள் உலர்ந்தன ,கைகள் இறுக மறுத்தது . Dallas இரவு வெப்பநிலை 41F நம்மூரில் 5 .5 C .

(அமெரிக்காவில் எல்லமே வேறு (Scaling Units) கணக்கீடு முறையும் அளவீடுகளும் -மற்ற நாடுகளில் புழக்கத்தில் இருக்கும் எதுவும் இங்கு பயன்பாட்டில் இல்லை .
km - Miles , kg - pounds, litre- Gallon ,Deg C -F, 230/50hz -110 /60hz, mm - Inches , என எல்லாவற்றுக்குமே வேறு முறையையே பயன் படுத்துகின்றனர்.)
ஆராய்ந்ததில் SI units பயன்பாட்டில் இல்லாத மூன்று நாடுகளில் US,ம் ஒன்று , மற்றவை Burma,liberia .-??!!!)).

என் பைகளை அவருடைய Lincolnநின் பின்புறம் வைத்தார் , நான் சற்றும் நிதானிக்காமல் உள்ளே வேகமாக அமர்ந்தேன்.
ஹீட்டர் வெப்பம் ஏற சில நிமிடங்கள் பிடித்தது.

இருண்ட ,அமைதியான, அகண்ட ,உறைந்த சாலைகள் .அந்த அளவிற்கு சாலைகளில் மின்விளக்குகள் இல்லை . ,நெருக்கடியே இல்லாமல் இயல்பாக சென்றது.





எங்களை பற்றி விசாரித்தார். நாங்கள் சிங்கப்பூர் என்ற வுடன் என்னிடம் இரண்டாம் முறை கேட்டார் "நீங்களும் சிங்கப்பூரா? " ,
" இல்லை நான் இந்தியா, ஆனால் சிங்கப்பூர் வாசி "
"அதானே பார்த்தால் சிங்கப்பூர் மாதிரி இல்லையே "
இங்கு பலரும் அநேகமாக சிங்கப்பூரை மற்றுமொரு சீன தேசம் என்ற நினைக்கின்றனர்.(தைவான்,ஹாங்காங் போன்று).
அதனால் சிங்கப்பூர் என்றாலே சீனமுகங்களே முன்வருகின்றன .(நமக்கு assam ,Megalaya.. போன்று)
தொடர்ந்து .. "உங்கள் இருப்பிடம் அமைதியான இடம் , இன்னும் 45 நிமிடங்கள் பயணம் , கவலை வேண்டாம் குளிர் இன்னும் 2 வாரங்கள் மட்டுமே, சென்ற வாரத்தில் தான் Dallas ல் "9 inch Snow", இதுவரை இவ்வளவு குளிரை டல்லஸ் வாசிகள் கண்டதில்லை , விரைவில் spring தொடங்கிவிடும் " அனைத்தையும் எங்களுக்கு சொன்னார் .
(Chris Tucker ஐ நினைத்துக்கொண்டேன்)

டல்லஸ் - சாலைகள் எனக்கு நம்மூர் புறநகர் சாலைகளையே நினைவூட்டியது .
விளம்பர Hoardings , நெருக்கடியற்ற இருண்ட பயணம், இருபக்கங்களிலும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை உறைந்த புள் தரை , ஓரிரு இலையுதிர்ந்த மரங்கள் , Motels, ஐயன்னார் சிலை போல வளர்ந்து நிற்கும் மின்சார கோபுரங்கள்


Dallas to Fortworth --- விமானநிலயத்தில் இருந்து உள்ளூர் வந்தாயிற்று.
அதிக வீடுகள் இல்லை , ஓரிரு குடியிருப்புகள், எல்லாமே cottage ,Villa type வீடுகள்.
இரண்டாம் மாடியில் என்னுடைய குடியிருப்பு.(எதிர்பார்த்ததை விட சொகுசு).
Integrated Electrical Kitchen, centralised HVAC , அழகான Hearth , என நவீன வசதிகளோடு இருந்தது.




வீட்டிற்கு பத்திரமாக வந்த செய்தியை கூறினேன்.
ஒரு சின்ன நடைக்காக மனம் ஏங்கியது. வெளியில் சென்றேன் 5 நிமிடந்தான் , குளிர் துரத்த கூட்டில் அடைந்துகொண்டேன்.
இதமான குளியல் , சூடாக black cofee
களைப்பு , படுக்கைக்கு தயாரானேன் .
சனிக்கிழமை ஆரமபித்த பயணம் சனிக்கிழமை இரவில் இருப்பதை உணர்ந்தேன் .நாளை ஞாயிறு என்றதும் , மனதில் ஒரு ஆறுதல்.
களையாத படுக்கை விரிப்புகள்,Dining table ,Spoon & forks,Tissues,Fridge ,அறையை பூரணமாகவும்,தயாராகவும் வைத்திருப்பதை நினைத்து பிரமிப்பாக இருந்தது.
படுத்த மாத்திரத்திலேயே தூக்கம் அழுத்த , விழித்தால் மணி இரவு 2:00 .
கால மாற்றத்தால் Circadian Rythms -வேறுபாடின் விளைவு என்பதை தொடர்ச்சியான 2 வார நடுநிசி விழிப்பிற்கு பின் அறிந்தேன்.
நம் உடற்கூற்றின் இயக்கமே ஆச்சரிய தக்கது. !!!!!

... To be continued

15 March, 2010

E pluribus unum - அமெரிக்கா(1)

அமெரிக்கா, US,States, West - பதின்ம வயதிலிருந்தே இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது ஏதோ ஒரு மாய பிம்பம் உள்ளுக்குள் தோன்றுவதுண்டு. பொதுவாக,கண்ணால் பார்க்கும் வரை ஒன்றை பற்றிய நமது எண்ணங்கள் ( மனிதர்கள், இடங்கள், ஊர்,வீடு,நாடு,உணவு எதுவாக இருந்தாலும்), அதன் மீது ஒரு சித்திரத்தை உருவாக்கும். இச்சித்திரத்தின் அடிப்படை யூகங்களும்,ஊடகங்களும் ஏற்படுத்தும் தாக்கம்.
உற்று நோக்க , எப்பொழுதும் நமது யூகம் 20 சதவிகிதம் உண்மையானால் அதிகம். காரணம் எதார்த்த நிலையில் அதன் மீதான நம் பார்வை வேறுபடுதல் .
அமெரிக்கா பற்றிய நமது எண்ணங்களும் இதற்கு விதிவிளக்கில்லை.
என்னுடைய அனுபவத்தையும் உங்களின் மாய சித்திர்த்திர்க்கு ஒரு வண்ணமாக்கிக்கொல்லுங்கள்.

Los Angeles விமானநிலையத்தை தொடுவதற்கு முன் ,ஜன்னலோர இருக்கையில் இருந்து பார்த்தல் மிகவும் ரம்மியமாக இருந்தது. சிங்கப்பூர்,சென்னை,ஜப்பான்(டோக்யோ) , இவற்றை விட மிகவும் அழகாகவே இருந்தது LA வின் Air-view. விமானத்திற்குள் குளிர் தெரியவில்லை . இருக்கையிலிருந்து வெளியில் நோக்க பச்சையும் , வெள்ளியுமாய் தோன்றிய காட்சி உள்ளூர ஒரு கலக்கத்தை உருவாக்க ,அடியேன் எனது ஜெர்கினோடு ,குல்லாவையும் மாட்டி தயாரானேன். அடுக்கடுக்கான வீடுகளும் , பின்னிப்பிணைந்த சாலைகளும் , எறும்புகள் போன்று ஊர்ந்து செல்லும் கார்களும், சரக்குந்துகளின் அணிவகுப்பும், கண்ணுக்கெட்டிய வரை தென் பட்டதே தவிர கடலின் எல்லையையோ , காலி நிலபரப்பையோ காண இயலவில்லை. (சிங்கப்பூரில் கடல், கப்பல், கட்டிடங்கள், அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் விமானம் தரையை தொடும்.) ஆனால் ஒரு இருபது நிமிடம் -- கடல், மலைகள்(பச்சை பசெறேன்றிருக்கும்),வெள்ளி கீற்றுகள் போர்த்திய கட்டிடங்கள், சாலைகள், கடந்த பின்னரே விமானம் தரையை தொட்டது.


சிங்கபூரிலும்,ஜப்பானிலும் தரையை தொடுவதை உணர முடிந்தது ,ஏறக்குறைய ஒரே மாதிரியான அதிர்வு. ( நம்மூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் முன் இறுக்கும் speedbreaker போன்று) . அமெரிக்க தரையை விமானம் தொடும் உணர்வு இந்த அளவிற்கு அதிரவில்லை, காரணம் LA-Tom Bradley விமானநிலயத்தின் ஓடு தளத்தின் தரம் (என் அபிப்ராயம்).
19 மணிநேர விமான பயணம் அதிக களைப்பை தந்தது.
LA வில்லிருந்து டல்லஸ் செல்வதற்கு உள்ளூர் விமானம் பிடிக்க இரண்டரை மணி நேரமே இருந்ததால் , எனக்கு குடியுரிமை பற்றியே அதிக கவலையும் கவனமும்.
அமரிக்க Immigration பற்றி நண்பர்களும் ,செய்திகளும் நிறைய சொல்லிருப்பதனால் , அடிவயிற்றில் ஒரு கலக்கம் இருந்தது.
(பொதுத்தேர்வில் தமிழ் முதர்த்தாள் கேள்வித்தாளை பெரும் பொழுது இருக்கும் அதே கலக்கம்.)
எதிர்பார்த்தது போன்று மக்கள் வரிசை ,வெள்ளையர்கள் ,சீனர்கள், ஜப்பானியர்கள்,இந்தியர்கள்,ஸ்பானியர்கள்,லட்டின் அமெரிக்க தேசத்தவர்கள் ,என பன்னாட்டு முகங்கள் பரவி விரிந்து இருந்தது . ஆனால் குடியுரிமை மிக மிக மெதுவாகவே நடந்தது. வழக்கம்போல் சீனர்களுக்கு அமெரிக்கன் இங்கிலிஷும்,அமெரிக்கர்களுக்கு சீனர்களின் இங்கிலிஷும் புரியாமல் காத்திருக்கும் நேரத்தை அதிகமாக்கின.
அதற்கு மகுடம் வைத்தார்ப்போல் , என்னுடைய ஆவணங்களை சரிபார்க்கும் குடியுரிமை அலுவலர் மிகவும் மெதுவாக பேசினார். எல்லா கேள்விகளையும் இரண்டு முறை கேட்க வேண்டியாயிற்று (எனக்கு DVD யில் Subtitle - Rewind செய்து பார்த்தது போன்று இருந்தது அவருடைய கேள்வி முறை).
அவருடைய ஒரு கையை மட்டுமே விசைபலகைக்கு (Keyboard ) உபயோகித்தார்.மற்றொரு கை Mouse பிடித்துக்கொண்டிருந்தது . அதிக மந்தமாகவே அவர் செயல் பட்டார்.
என்ன செய்ய ! இது அனைத்திற்கும் நன்கு பழகிய பின்னரே எனக்கு கடவுச்சீட்டு(விசா) அளிக்கப்பட்டது .
Application , E-Appointment , Queue in Embassy, Document Surrender , Verification, Interview, Waiting Time -- என்று முத்துக்குளிப்பது போன்று ஒரு பிரசவ வேதனைக்கு பிறகே விசா என்னும் வரம் கிட்டும்.
அதெல்லாம் பார்த்த பின்பு இவன் என்ன சுண்டக்காய்--- என்று தோன்றினாலும் , அடி மனதில் பரீட்சை முடிவுகளுக்கு காத்திருக்கும் பகுத்தறிவாளனின் வேண்டுதல் போலவே ஒரு எண்ண ஓட்டம் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது .
சரியாக பத்து நிமிடங்கள் ரேகைப்பதிவு , ஆவணங்கள் சரிபார்த்தல் , முடிந்தவுடன் --baggage Claiming சுமார் இருபது நிமிடக்கதிற்கு பிறகு உள்ளூர் விமான சேவை மையத்தை அடைந்தேன்.
(The Terminal - சினிமா நினைவுக்கு வந்தது ). அதில் வருவது ஏறக்குறைய உண்மையே.அமெரிக்க குடியுரிமையை கீழ்த்தனமாகவே விமர்சிதிறக்கிறார்கள் .
(பின் குறிப்பு Tom Hanks, Steven Spielberg ஆகிய இருவரும் அமெரிக்கர்களே. உண்மையான ஊடக சுதந்திரம்.,----பாய்ஸ் ,Da Vinci Code ------இந்திய திரையரங்குகளையும் ஒப்பிடுக ... )

Tom Bradley International Airport கொஞ்சம் பழைய தோற்றத்திலேயே இருந்தது.
LA-உள்ளூர் விமான நிலையமோ நெரிசலாகவும் ,ஒழுங்கின்மையுமாகவே இருந்தது.
இங்குதான் சோதனைச்சாவடி அமைக்கபட்டிருந்தது.

R.K .Laxman வரைந்த கார்டூன் ஒன்று சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்ப என் நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய எனக்கும் இந்த நிலை தான்.




Shoes, Belt,bags,Laptops எல்லாவற்றையும் முழுவதுமாக அவிழ்கிற நிலை .எல்லாத்துக்கும் "பின்லேடோபோபியா" தான் காரணம்

இந்நிலையில் வரிசை வேறு , அதிக அசௌகரியங்களுக்கு பின்பு தான் உள்ளூர் சேவையை சென்றடைய நேர்ந்தது. கூட்டமும் இரைச்சலும் எனக்கு கோயம்பேடு mofussil பேருந்து நிலையத்தை நினைவூட்டின.




டல்லஸ் செல்ல இன்னும் இரண்டு மணிநேரங்களாகும் என்ற செய்தி சற்று ஆறுதல் அளித்து. அனால் அமெரிக்காவில் நேரதாமதம் நான் எதிர் பாராத ஒன்று . அதை பற்றி கேள்வி ஞானம் இல்லை . Internet -Free இல்லை, ஏமாற்றம் .(அடியேன் தமிழன் - இலவசம் எமது பிறப்புரிமை).
சக பயணி சீன(சிங்கப்பூரர்) அன்பருக்கும் ஒரே ஏமாற்றம் . கொஞ்சம் கோபப்பட்டார் . அவருடைய கோபம் அமெரிக்க வான்எல்லையை தொட்டதுமே ஆரம்பமானது , அவர் இரு முறை அமேரிக்கா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எறியும் கொள்ளியில் பெட்ரோல் ஊற்றியது போல் வந்தது ஒரு செய்தி ------------- விமானம் மேலும் இரண்டு மணி நேர தாமதம்.
இதில் ஒரு ஆச்சரியம் ஒருவரும் ( என்னையும் ,என் சீன நண்பரையும் தவிர) அலட்டிக்கொள்ளவில்லை.
அதிக களைப்பு , ஓய்வின்மை , உலர்ந்த நாசி , பசி , தாகம் எல்லாம் சேர்த்து ஒரு மயக்க நிலையில் - (அழைப்பு செய்திக்காக திட்டில் காத்திருக்கும் அகதி போல்) விமான அறிவிப்பிற்காக மயங்கி கிடந்தோம். கையில் இருந்த நீரை உட்கொண்டு , சக பயணிகளை கவனித்தேன் . ஒருவரும் கோவம் கொள்ளவில்லை. iPhones,iPods, Magazines, Chit Chats ,என்று நேரம் போக்கிகொண்டிருன்தனர் .
விமான அறிவிப்பு வந்தவுடன் 15 நிமிடத்தில் விமானம் தயாரானது. உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தோம்.
என் அருகில் ஒரு அமெரிக்க பெண்மணி (முற்பதுகளில் இறுக்கவேண்டும் ) , தன்னை சாரா என்றும் ,தான் missisippi செல்வதற்காக டல்லஸ் வருகிறாள் என்றும் சுய அறிமுகப்படுத்திக்கொண்டு , என்னை பற்றியும் , எங்கு செல்கிறேன் என்பதையும் கேட்டுக்கொண்டாள்.
கொஞ்சம் சந்தோஷமாகவும் ,ஆச்சர்யமாகவும் இருந்தது.
விமானத்தில் பயணிகள் அனைவரும் மிக கட்டுக்கோப்புடன் இருந்தனர்.ஒருவரும் cellphones இயக்கவில்லை. seat Belt அணிந்து கொண்டனர் ,சப்தமில்லை, அங்குமிங்கும் நடை இல்லை .
அமைதியான பயணம். ( நான் Air-India Express ஐ நினைத்துக்கொண்டேன்---
ஏனென்று சென்றவர் அறிவர் !!!!!)

Apple Juice & Corn Twisters -கொரித்துக்கொண்டேன் . நல்ல தூக்கம் சொருகியது .அருகில் இருப்பவர் மேல் சாய்ந்து விடுவேனோ என்ற பயம் தொற்றிக்கொள்ள -தூக்கம் வரமறுத்தது.
LA விற்கும் டல்லஸ் க்கும் ௨ மணி நேர வித்தியாசம் . கிழக்கு நோக்கிய பயணம் . அதனால் Dallas இரவு 8 மணி LA-ல் மாலை 6 மணி.
Note: CT மற்றும் CDT என்று இரு வேறு நேர முறைகள் இங்கு பயன்பாட்டில் உள்ளது.
Spring Forward: பொதுவாக March இரண்டாம் ஞாயிறு நள்ளிரவில் ஒரு மணி நேரத்தை எல்லா கடிகாரத்திலும் கூட்ட வேண்டும் .
Fallback :November இரண்டாம் ஞாயிறு நள்ளிரவில் ஒரு மணி நேரத்தை எல்லா கடிகாரத்திலும் குறைக்க வேண்டும் .


மூன்றரை மணி நேர பயணத்திற்கு பின் டல்லஸ் வந்தடைந்தோம்.
Immigration ,Checking என்று எதுவுமில்லை. வெளியில் வந்தவுடன் -கருப்பு நண்பர் ஒருவர் வெள்ளை உடையில் பெயர் பலகையுடன் காத்திருந்தார் .வெளியில் வந்தவுடன் குளிர் ஊசிபோல் கன்னங்களில் தைதெடுத்தது .


........To be Continued