17 March, 2010

E pluribus unum - அமெரிக்கா-3

படுத்த மாத்திரத்திலேயே தூக்கம் அழுத்த , விழித்தால் மணி இரவு 2:00 .
கால மாற்றத்தால் Circadian Rythms -வேறுபாடின் விளைவு என்பதை தொடர்ச்சியான 2 வார நடுநிசி விழிப்பிற்கு பின் அறிந்தேன்.

உடற்கூற்றின் இயக்கமே ஆச்சரிய தக்கது. !!!!!
இரவில் ஓரிரு முறை தூக்கம் தடைபட்டாலும் அசதியும் குளிரும் கலந்து நித்திரையை ஆரத்தழுவியது.
காலை 7 மணி, அனைத்துமே புதிதாய் இருந்தது . எது வழி, எது அறை என்று மூளைக்கு விளங்க சிறிது நேரம் பிடித்தது.
ஸ்ரமபரிகரங்களை முடித்து , வெளியில் செல்லும்போது மணி 9.
வெப்பநிலை 9˚C. வெளியில் வந்ததும் குடியிருப்பை முழுதாய் பார்த்தேன்.

இரவு ஓர் மர்ம கூடாரம் , .இரவோடு குளிரும் சேர்ந்த சதிகாரக்கூட்டணியின் ஆதிக்கத்தில் அனைத்துமே விழியிலிருந்து விலகி , காட்சிகள் மனதில் பதிய மறுக்கும் .இரவில் கடந்து வந்த பாதைகள் அனைத்துமே மாய மூட்டமாய் இருந்தது .
கீழிறங்கியவுடன் , கண்ணில் பட்டவை யாவுமே புதிதாய் இருந்தது.
நன்கு வளர்ந்து தடித்த இலையுதிர்ந்த மரங்களில் பருத்த அணில்கள்,நிசப்தமான பறவைகளின் கூச்சல் , ஆளரவமற்ற வீதி, பழுப்பு புல்வெளியின் மீது காற்றில் புரளும் காய்ந்த Maple இலைகள் பார்த்த மாத்திரத்திலேயே (Notre Dame de Grace)ஓவியம் நினைவில் விழ ,, தூரத்தில் ஒலித்த ரயிலின் கூவல் - உறைந்த கட்சியை மெல்ல நகர்த்தியது.
என்னோடு வந்த நண்பரின் குடியிருப்புக்கு 5 நிமிட நடை.
உள்ளே வெப்பமாக இருந்தது, Hot Milo, சின்ன அரட்டை,வேறு ஒரு நண்பரும் சேர்ந்து,
கடைக்கு செல்ல Dodge Ram (Black)-ல் தயாரானோம், வெளிநாட்டினரை தவிர அனைவருமே கார் வைத்திருக்கிறார்கள். நிறைய தெரிந்திராத ரகம். Texas வாசிகள் அதிகம் Truck பிரியர்கள். பலரும் விவசாயம், பண்ணை,கால்நடை சார்ந்த தொழிளில் இருப்பதால் இவர்கள் அநேகமாக Truck விரும்பிகளாகவே இருக்கிறார்கள். (Truck மோகத்திற்கு மற்றுமொரு காரணம் Masculinity. ஆண்கள் பலரும் Truck ஓட்டுவதை பெருமையாக நினைக்கிறார்கள்.Dallas பொறுத்த வரை 10 இல் 7 கார் வகைகள் Trucks)
பகலில் சாலைகள் குளிரால் மோட்டமாகவே இருந்தது.
எங்கும் 2 கொடிகள் எற்றப்படிருக்கிறது. ஒன்று தேசியக்கொடி, மற்றொன்று Texas மாநிலக்கொடி.,
Texas - Lone Star State என்றழைப்பதற்கு காரணமும் Texas கொடியின் தோற்றம் தான்.மேலும் எல்லா கார்களின் எண்பலகைகளும் அந்தந்த மாநிலத்தின் பெயரிலேயே பொறிக்கபட்டிருக்கிறது.
Texas- French,Spain, Mexico colony யாக இருந்துள்ளது.
அதிகம் Rodeo நிகழ்ச்சிகள் உள்ளதற்கு காரணமும் இதுதான். பிரெஞ்சு ஆதிக்கம் Lousiana வில் அதிகம்-அண்டை மாநிலம் (அங்கு அதிகம் கருப்பர்களே). மற்றொரு மாநிலம் Oklahoma.


Texas - Mexico எல்லை என்பதால் எல்லையோர நகரங்களில் -அதிக குற்றங்கள் என்பது செய்தி.
மெக்ஸிகோவும் , அமெரிக்காவும் - Texas குக்காக 1850 களில் பல முறை சண்டை இட்டுள்ளன. இந்த colonization -உணவு ,உடை,வாழ்க்கை முறைகளில் பிரதிபலிக்கிறது.

இது தவிர Texas Long Horns (Logo) சின்னம் இங்கு அதிக பிரசித்தி. வீடுகளில், உணவகங்களில், கார்களில், தெருப்பலகைகளில், உடைகளில் என்று எல்லாவற்றிலும் காண முடிகிறது,
45 நிமிட பயணத்தில் பேசிக்கொண்டே நிறைய கவனித்தேன் , குளிர்கால உடைகள், அகண்ட வெட்ட வெளி, பரந்த நிலப்பரப்பு, சாலையில் வேகமும் ஒழுக்கமுறையும், தெருக்களில் நடப்பவர்கள் மிகமிகக்குறைவு .உணவிற்காக GPS தயார் செய்து , Bombay Grill நோக்கி நகர்ந்தோம் ....

.....To be Continued
No comments: