15 March, 2010

E pluribus unum - அமெரிக்கா(1)

அமெரிக்கா, US,States, West - பதின்ம வயதிலிருந்தே இந்த வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுது ஏதோ ஒரு மாய பிம்பம் உள்ளுக்குள் தோன்றுவதுண்டு. பொதுவாக,கண்ணால் பார்க்கும் வரை ஒன்றை பற்றிய நமது எண்ணங்கள் ( மனிதர்கள், இடங்கள், ஊர்,வீடு,நாடு,உணவு எதுவாக இருந்தாலும்), அதன் மீது ஒரு சித்திரத்தை உருவாக்கும். இச்சித்திரத்தின் அடிப்படை யூகங்களும்,ஊடகங்களும் ஏற்படுத்தும் தாக்கம்.
உற்று நோக்க , எப்பொழுதும் நமது யூகம் 20 சதவிகிதம் உண்மையானால் அதிகம். காரணம் எதார்த்த நிலையில் அதன் மீதான நம் பார்வை வேறுபடுதல் .
அமெரிக்கா பற்றிய நமது எண்ணங்களும் இதற்கு விதிவிளக்கில்லை.
என்னுடைய அனுபவத்தையும் உங்களின் மாய சித்திர்த்திர்க்கு ஒரு வண்ணமாக்கிக்கொல்லுங்கள்.

Los Angeles விமானநிலையத்தை தொடுவதற்கு முன் ,ஜன்னலோர இருக்கையில் இருந்து பார்த்தல் மிகவும் ரம்மியமாக இருந்தது. சிங்கப்பூர்,சென்னை,ஜப்பான்(டோக்யோ) , இவற்றை விட மிகவும் அழகாகவே இருந்தது LA வின் Air-view. விமானத்திற்குள் குளிர் தெரியவில்லை . இருக்கையிலிருந்து வெளியில் நோக்க பச்சையும் , வெள்ளியுமாய் தோன்றிய காட்சி உள்ளூர ஒரு கலக்கத்தை உருவாக்க ,அடியேன் எனது ஜெர்கினோடு ,குல்லாவையும் மாட்டி தயாரானேன். அடுக்கடுக்கான வீடுகளும் , பின்னிப்பிணைந்த சாலைகளும் , எறும்புகள் போன்று ஊர்ந்து செல்லும் கார்களும், சரக்குந்துகளின் அணிவகுப்பும், கண்ணுக்கெட்டிய வரை தென் பட்டதே தவிர கடலின் எல்லையையோ , காலி நிலபரப்பையோ காண இயலவில்லை. (சிங்கப்பூரில் கடல், கப்பல், கட்டிடங்கள், அடுத்த ஐந்து நிமிடத்திற்குள் விமானம் தரையை தொடும்.) ஆனால் ஒரு இருபது நிமிடம் -- கடல், மலைகள்(பச்சை பசெறேன்றிருக்கும்),வெள்ளி கீற்றுகள் போர்த்திய கட்டிடங்கள், சாலைகள், கடந்த பின்னரே விமானம் தரையை தொட்டது.


சிங்கபூரிலும்,ஜப்பானிலும் தரையை தொடுவதை உணர முடிந்தது ,ஏறக்குறைய ஒரே மாதிரியான அதிர்வு. ( நம்மூரில் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் முன் இறுக்கும் speedbreaker போன்று) . அமெரிக்க தரையை விமானம் தொடும் உணர்வு இந்த அளவிற்கு அதிரவில்லை, காரணம் LA-Tom Bradley விமானநிலயத்தின் ஓடு தளத்தின் தரம் (என் அபிப்ராயம்).
19 மணிநேர விமான பயணம் அதிக களைப்பை தந்தது.
LA வில்லிருந்து டல்லஸ் செல்வதற்கு உள்ளூர் விமானம் பிடிக்க இரண்டரை மணி நேரமே இருந்ததால் , எனக்கு குடியுரிமை பற்றியே அதிக கவலையும் கவனமும்.
அமரிக்க Immigration பற்றி நண்பர்களும் ,செய்திகளும் நிறைய சொல்லிருப்பதனால் , அடிவயிற்றில் ஒரு கலக்கம் இருந்தது.
(பொதுத்தேர்வில் தமிழ் முதர்த்தாள் கேள்வித்தாளை பெரும் பொழுது இருக்கும் அதே கலக்கம்.)
எதிர்பார்த்தது போன்று மக்கள் வரிசை ,வெள்ளையர்கள் ,சீனர்கள், ஜப்பானியர்கள்,இந்தியர்கள்,ஸ்பானியர்கள்,லட்டின் அமெரிக்க தேசத்தவர்கள் ,என பன்னாட்டு முகங்கள் பரவி விரிந்து இருந்தது . ஆனால் குடியுரிமை மிக மிக மெதுவாகவே நடந்தது. வழக்கம்போல் சீனர்களுக்கு அமெரிக்கன் இங்கிலிஷும்,அமெரிக்கர்களுக்கு சீனர்களின் இங்கிலிஷும் புரியாமல் காத்திருக்கும் நேரத்தை அதிகமாக்கின.
அதற்கு மகுடம் வைத்தார்ப்போல் , என்னுடைய ஆவணங்களை சரிபார்க்கும் குடியுரிமை அலுவலர் மிகவும் மெதுவாக பேசினார். எல்லா கேள்விகளையும் இரண்டு முறை கேட்க வேண்டியாயிற்று (எனக்கு DVD யில் Subtitle - Rewind செய்து பார்த்தது போன்று இருந்தது அவருடைய கேள்வி முறை).
அவருடைய ஒரு கையை மட்டுமே விசைபலகைக்கு (Keyboard ) உபயோகித்தார்.மற்றொரு கை Mouse பிடித்துக்கொண்டிருந்தது . அதிக மந்தமாகவே அவர் செயல் பட்டார்.
என்ன செய்ய ! இது அனைத்திற்கும் நன்கு பழகிய பின்னரே எனக்கு கடவுச்சீட்டு(விசா) அளிக்கப்பட்டது .
Application , E-Appointment , Queue in Embassy, Document Surrender , Verification, Interview, Waiting Time -- என்று முத்துக்குளிப்பது போன்று ஒரு பிரசவ வேதனைக்கு பிறகே விசா என்னும் வரம் கிட்டும்.
அதெல்லாம் பார்த்த பின்பு இவன் என்ன சுண்டக்காய்--- என்று தோன்றினாலும் , அடி மனதில் பரீட்சை முடிவுகளுக்கு காத்திருக்கும் பகுத்தறிவாளனின் வேண்டுதல் போலவே ஒரு எண்ண ஓட்டம் மனதின் ஓரத்தில் இருக்கத்தான் செய்தது .
சரியாக பத்து நிமிடங்கள் ரேகைப்பதிவு , ஆவணங்கள் சரிபார்த்தல் , முடிந்தவுடன் --baggage Claiming சுமார் இருபது நிமிடக்கதிற்கு பிறகு உள்ளூர் விமான சேவை மையத்தை அடைந்தேன்.
(The Terminal - சினிமா நினைவுக்கு வந்தது ). அதில் வருவது ஏறக்குறைய உண்மையே.அமெரிக்க குடியுரிமையை கீழ்த்தனமாகவே விமர்சிதிறக்கிறார்கள் .
(பின் குறிப்பு Tom Hanks, Steven Spielberg ஆகிய இருவரும் அமெரிக்கர்களே. உண்மையான ஊடக சுதந்திரம்.,----பாய்ஸ் ,Da Vinci Code ------இந்திய திரையரங்குகளையும் ஒப்பிடுக ... )

Tom Bradley International Airport கொஞ்சம் பழைய தோற்றத்திலேயே இருந்தது.
LA-உள்ளூர் விமான நிலையமோ நெரிசலாகவும் ,ஒழுங்கின்மையுமாகவே இருந்தது.
இங்குதான் சோதனைச்சாவடி அமைக்கபட்டிருந்தது.

R.K .Laxman வரைந்த கார்டூன் ஒன்று சமீபத்தில் நண்பர் ஒருவர் அனுப்ப என் நினைவுக்கு வந்தது. ஏறக்குறைய எனக்கும் இந்த நிலை தான்.
Shoes, Belt,bags,Laptops எல்லாவற்றையும் முழுவதுமாக அவிழ்கிற நிலை .எல்லாத்துக்கும் "பின்லேடோபோபியா" தான் காரணம்

இந்நிலையில் வரிசை வேறு , அதிக அசௌகரியங்களுக்கு பின்பு தான் உள்ளூர் சேவையை சென்றடைய நேர்ந்தது. கூட்டமும் இரைச்சலும் எனக்கு கோயம்பேடு mofussil பேருந்து நிலையத்தை நினைவூட்டின.
டல்லஸ் செல்ல இன்னும் இரண்டு மணிநேரங்களாகும் என்ற செய்தி சற்று ஆறுதல் அளித்து. அனால் அமெரிக்காவில் நேரதாமதம் நான் எதிர் பாராத ஒன்று . அதை பற்றி கேள்வி ஞானம் இல்லை . Internet -Free இல்லை, ஏமாற்றம் .(அடியேன் தமிழன் - இலவசம் எமது பிறப்புரிமை).
சக பயணி சீன(சிங்கப்பூரர்) அன்பருக்கும் ஒரே ஏமாற்றம் . கொஞ்சம் கோபப்பட்டார் . அவருடைய கோபம் அமெரிக்க வான்எல்லையை தொட்டதுமே ஆரம்பமானது , அவர் இரு முறை அமேரிக்கா வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. எறியும் கொள்ளியில் பெட்ரோல் ஊற்றியது போல் வந்தது ஒரு செய்தி ------------- விமானம் மேலும் இரண்டு மணி நேர தாமதம்.
இதில் ஒரு ஆச்சரியம் ஒருவரும் ( என்னையும் ,என் சீன நண்பரையும் தவிர) அலட்டிக்கொள்ளவில்லை.
அதிக களைப்பு , ஓய்வின்மை , உலர்ந்த நாசி , பசி , தாகம் எல்லாம் சேர்த்து ஒரு மயக்க நிலையில் - (அழைப்பு செய்திக்காக திட்டில் காத்திருக்கும் அகதி போல்) விமான அறிவிப்பிற்காக மயங்கி கிடந்தோம். கையில் இருந்த நீரை உட்கொண்டு , சக பயணிகளை கவனித்தேன் . ஒருவரும் கோவம் கொள்ளவில்லை. iPhones,iPods, Magazines, Chit Chats ,என்று நேரம் போக்கிகொண்டிருன்தனர் .
விமான அறிவிப்பு வந்தவுடன் 15 நிமிடத்தில் விமானம் தயாரானது. உள்ளே சென்று இருக்கையில் அமர்ந்தோம்.
என் அருகில் ஒரு அமெரிக்க பெண்மணி (முற்பதுகளில் இறுக்கவேண்டும் ) , தன்னை சாரா என்றும் ,தான் missisippi செல்வதற்காக டல்லஸ் வருகிறாள் என்றும் சுய அறிமுகப்படுத்திக்கொண்டு , என்னை பற்றியும் , எங்கு செல்கிறேன் என்பதையும் கேட்டுக்கொண்டாள்.
கொஞ்சம் சந்தோஷமாகவும் ,ஆச்சர்யமாகவும் இருந்தது.
விமானத்தில் பயணிகள் அனைவரும் மிக கட்டுக்கோப்புடன் இருந்தனர்.ஒருவரும் cellphones இயக்கவில்லை. seat Belt அணிந்து கொண்டனர் ,சப்தமில்லை, அங்குமிங்கும் நடை இல்லை .
அமைதியான பயணம். ( நான் Air-India Express ஐ நினைத்துக்கொண்டேன்---
ஏனென்று சென்றவர் அறிவர் !!!!!)

Apple Juice & Corn Twisters -கொரித்துக்கொண்டேன் . நல்ல தூக்கம் சொருகியது .அருகில் இருப்பவர் மேல் சாய்ந்து விடுவேனோ என்ற பயம் தொற்றிக்கொள்ள -தூக்கம் வரமறுத்தது.
LA விற்கும் டல்லஸ் க்கும் ௨ மணி நேர வித்தியாசம் . கிழக்கு நோக்கிய பயணம் . அதனால் Dallas இரவு 8 மணி LA-ல் மாலை 6 மணி.
Note: CT மற்றும் CDT என்று இரு வேறு நேர முறைகள் இங்கு பயன்பாட்டில் உள்ளது.
Spring Forward: பொதுவாக March இரண்டாம் ஞாயிறு நள்ளிரவில் ஒரு மணி நேரத்தை எல்லா கடிகாரத்திலும் கூட்ட வேண்டும் .
Fallback :November இரண்டாம் ஞாயிறு நள்ளிரவில் ஒரு மணி நேரத்தை எல்லா கடிகாரத்திலும் குறைக்க வேண்டும் .


மூன்றரை மணி நேர பயணத்திற்கு பின் டல்லஸ் வந்தடைந்தோம்.
Immigration ,Checking என்று எதுவுமில்லை. வெளியில் வந்தவுடன் -கருப்பு நண்பர் ஒருவர் வெள்ளை உடையில் பெயர் பலகையுடன் காத்திருந்தார் .வெளியில் வந்தவுடன் குளிர் ஊசிபோல் கன்னங்களில் தைதெடுத்தது .


........To be Continued

2 comments:

bhooma said...

hahahahaa...fun reading..good work done..Keep continuing....

Harihara said...

நல்லதொரு பயண கட்டுரை.
சம்பவங்கள் தொடர்பான சார், முரண் ஒப்பீடுகள் அருமை.