13 February, 2010

An Experiment with the Truth

This was my response to a negative criticism  about Heyram in 2009
1.கமலின் தன்முனைப்பும் - கதைக்களமும்
சாகேத் ராம் (கெளதம் கந்தாடை) டாக்டரிடம்(அப்பாஸ்) தன் அடுத்த நாவலின் மையத்தை பற்றி கூறும் பொழுது - அது தன் தாத்தாவின் கதை என்றும் , அதனுள் அவர் கதை கூறும் யுக்தியையும் வெகு அருமையாக ஒரு உதாரணத்துடன் கூறுவர்.
(இந்த காட்சி midnight's Children ல் வரும் பத்மாவை போன்றதொரு அமைப்பு , பார்வையாளர்கள் கேட்க விரும்பும் சந்தேகங்களை ஒரு கதாபாத்திரம் கேட்பது போன்ற காட்சியை அப்பாஸ் மூலம் செய்விக்க பட்டிருக்கின்றது.)
நாவலாசிரியர் , தன் தாத்தா எப்பொழுதுமே கதை கூறுபவர் என்றும் , "எது உண்மை ,எது அவராக சேர்த்தது என்பதே தெரியாதவாறு அவர் கூறுபவர்"
அவர் எபோழுதுமே தன்னை முன்னிலை படுத்தி கதை கூறும் யுக்தியை " ஒரு ஊரில ஒரு ராஜா இருந்தான்னு சொல்லமாட்டார் , தான் வாழ்ந்த ஊர்ல ராஜா இருந்தான்னு சொல்லுவார்" என்கின்ற உதாரணமும் நமக்கு தெளிவு படுத்துகிறது.
( First Person Singular பாணியில் கதை )
கதாநாயகன் (protagonist) தன்னை முன்னிலை படுத்தி கதை கூறுபவன் என்பதும்,
தன்னை முன்னிலை படுத்தியே வுலகை பார்ப்பவன் என்பதும் இக்கட்சிகளின் அர்த்தமாகவே நான் கொள்கின்றேன் .
தான் வாழ்ந்த , ரசித்த ,பார்த்த ,அனுபவித்த இடங்களில் அவர் இருப்பதில் என்ன தவறு?
கமல் எல்லா காட்சிகளிலும் இருப்பது என்பது உங்களின் குற்றச்சாட்டு என்றால் ,
அவர் Absence ல் நிகழ்ந்த ஒன்றை அவர் தன கதையில் எப்படி கூறமுடியும்?இது எப்படி தன்முனைப்பாகும்?

2.இப்படம் RSS -இந்துத்வா சாயம் பூசப்பட்டிருப்பதை ஏற்க இயலாது.
Its a Neutral movie.
Abhyankar வருகைக்கும் பேச்சிற்க்கும் justification உள்ளது .
Direct Action Day பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள் , Augut 16 -1946 - இதன் தாக்கம் எப்படி என்பதே அப்யங்கரின் காட்சிகள் உணர்த்துகின்றது .
கமலை காட்டிலும் அதுல் குல்கர்நிக்கே அதிக புள்ளிகள் (இந்த இடத்தில் ).
இந்துக்கள் இஸ்லாமியர்களை கொள்ளும் காட்சிகள், சீக்கியர்கள் இஸ்லாமியர்களை கொள்ளும் காட்சிகள், இந்து மகாசபாவை சேர்ந்தவர்கள் (மதன் லால் , திகம்பர பாட்ஜே,கிஸ்தாயா ,நாராயண ஆப்தே , நது ராம் ) இவர்களின் முதல் முயற்சி , மராட்டியத்தில் நிகழும் நிகழ்ச்சிகள் , சாரியின்(டெல்லி கணேஷ்) வருகை, அவரின் சகாக்களின் மிருகத்தனம், சாந்தினி சொவ்க்கில் அம்ஜத் கொல்லப்படுவது,
அம்ஜத் ராமரை பற்றி விதேசி என்ற குற்றச்சாட்டு , மேலும் காந்தியிடம் confession, இவைகளை நீங்கள் கவனிக்க தவறிவிட்டீர்கள் போலும்.
இது இந்து மதவாதத்தையும் அதன் தவறான போக்கையும் சுட்டிகாட்டும் காட்சிகள்.
3. இப்படம் ஒரு தேசத்தின் வரலாறு ( Biography of a Nation ).

திரை காட்சிகளின் tone & texture, கதை புனையப்பட்டிருக்கும் போக்கு, நாம் மறக்கக்கூடாத வரலாற்றையும் , படிப்பினையையும் சுட்டிகாட்டுகிறது .
சில உரையாடல்கள் நம்மை பின்னோக்கி இழுத்துசெல்கின்றது .
Sir Cyril Radcliff- நம் நாட்டின் எல்லை கோடுகளை நிர்ணயித்தது ,
Shurarvadhy யும் - August-16 , Noakhali வன்மங்களும்,(Direct Action Day -இது பற்றி நிறைய பதிவுகள் உள்ளன ).
அப்யங்கரின் வாக்குவாதங்கள் " ஒரு ஓநாயா இருந்து பார்த்தா தான் அதன் ந்யாய அநியாயங்கள் புரியும் " , " கொலை குத்தம் நா யுத்தமும் குத்தம் isnt it", போன்ற வசனங்கள் - Lateral side of Crime in viewers perspective .
இப்ராஹிம் ( நாசெர்) என்ற காவலர் டிசம்பர் 6 அன்று இஸ்லாமிய கலவரத்திற்கு எதிராக நின்று போராடும் காட்சிகள் , இதில் காவி சாயம் எங்கு உள்ளது ?
இப்படி கூறுவது பார்வையாளனின் குறையே தவிற ,படைப்பாளியின் குற்றம் அல்ல .

The Assassination of Mahatma gandhi என்ற புத்தகத்தில் வரும் நிகழ்வுகள் அனைத்தும்
hotel Marina , The First Attempt in Birla mandir, காந்தியின் அட்டவணை , அனைத்தும் தத்ரூபமாகவே காட்டப்படிருக்கின்றது , Expect - Saketh raamin இடங்களை தவிற-Biograhy with fiction போன்ற கலவை ( கெளதம் கந்தாடை சொல்வது போல்).
இக்காட்சிகளும் Midnights Chilren இன் Merchurochrome போன்றே அமைந்துள்ளது. (Rushdie அதனை ஜாலியன் வாலபக்ஹ் பற்றி சொல்லி இருப்பது குறிப்பிடத்தக்கது) .
மேலும் சாகேத் ராம் காந்தியுடன் அருகில் நின்று உரையாடுதல் is a Stunning Shot.
Gandhi: See mister Uppili, your son in law is also a mahatma!
Ram: No, I am not!
Gandhi: Most mahatmas don't admit they are one. Do you think that I am a mahatma?
Ram: You will deny it if I say you are, So I shall deny you another denial sir.
Gandhi: I am willing to take all this communal hatred in the form a bullet, If I am promised that along with that they will also bury this communal hatred and live together as one community.

The above dialogues depicts worshiping Mr.Gandhi as a man of Centuries!!!!
மேலும் இறுதிக்காட்சியில் , Mountbatten , நேரு பேசும் வசனங்களும் இங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.
Nehru: How did you know it was a Hindu?
Mountbatten: I didn’t. Was it a Hindu?
Nehru: Yes.
Mountbatten: Thank God for that! Or the country would have been torn apart.
இதன் அர்த்தம் தாங்கள் அறிந்ததே !!!


தொடர்ச்சியாக காந்திஜியின் பாத ரக்ஷைகளும், கண்ணாடியும் , தொலைந்தன என்ற ஒரு பத்திரிகை விவரிப்பது போன்ற ஒரு காட்சி(Shot) .
அற்புதமான கதை புனைவு

இந்த நூற்றாண்டில், நம் நாட்டின் கடந்த கால நிகழ்வுகளை , நம் கண் முன்னே கொண்டு வரும் முயற்சி என்பதும் என் கருத்து.
கமலின் ஒரு உன்னத முயற்சியும், அதன் வெற்றியுமாகவே "ஹே ராமை" பார்க்க வேண்டும், இது விமர்சிக்க படும் அளவிற்கு ஒரு சராசரி படம் இல்லை என்றே தோன்றுகின்றது.
கமலை விமர்சிக்க பல படங்கள் இருக்கின்றது , நீங்கள் பாராட்ட ஒரு அம்சமும் இல்லாத படம் இது என்பதை சற்று மனம் ஏற்க மறுக்கின்றது.
Its a Flawless movie.

No comments: